Monday, July 27, 2009

அன்பே வா

ஒரு பார்வை பார்க்கிறாய்!
புதிதாய் நான் பூக்கிறேன்!!
இதயம் இடம் மாறுதே!!!
இது காதலா?.
நிலவோடு தேய்கிறேன்!
நினைவாலே கரைகிறேன்!!
சுகமான வேதனை!!!
இது காதலா?.
எங்கேயோ எங்கேயோ
என்னுள்ளே எங்கேயோ
விண்மீன்கள் சிதறுதே ஏனடி!
அன்பே வா அன்பே வா...
அன்பே வா அன்பே வா...

கண்ணுக்குள்ளே கண்ணுக்குள்ளே - காதல் வந்து
நெஞ்சைத் தொட்டு போவதேன்!
என்ன இது என்ன இது - வானவில்லில்
வண்ணம் ரெண்டு கூடுதே!!
தீண்டினால் வானிலே மேகமாய் அலைகிறேன்!
நீங்கினால் தூரத்தில் புள்ளியாய் தொலைகிறேன்!
நில்லென்றால் நில்லாமல் ஏனென்று கேளாமல்,
ஏதேதோ செய்கிறாய் ஏனடி?.
அன்பே வா அன்பே வா...
அன்பே வா அன்பே வா...

என்ன சொல்லி என்ன சொல்லி
காதலதை உன்னிடத்தில் காட்டுவேன்!
சத்தமின்றி சத்தமின்றி மௌனமாய்
நெஞ்சுக்குள்ளே பூட்டுவேன்!!
கவிதைகள் எழுதிட
வார்த்தைகள் தேடினேன்!
உன் பெயர் எழுதி நான்
கவிதையாய் பாடினேன்!!
என்னுள்ளே என்னுள்ளே
உன் கண்ணின் மின்சாரம்
ஏதேதோ செய்யுதே ஏனடி?
அன்பே வா அன்பே வா...
அன்பே வா அன்பே வா...

No comments:

Post a Comment