Monday, July 27, 2009
அன்பே வா
புதிதாய் நான் பூக்கிறேன்!!
இதயம் இடம் மாறுதே!!!
இது காதலா?.
நிலவோடு தேய்கிறேன்!
நினைவாலே கரைகிறேன்!!
சுகமான வேதனை!!!
இது காதலா?.
எங்கேயோ எங்கேயோ
என்னுள்ளே எங்கேயோ
விண்மீன்கள் சிதறுதே ஏனடி!
அன்பே வா அன்பே வா...
அன்பே வா அன்பே வா...
கண்ணுக்குள்ளே கண்ணுக்குள்ளே - காதல் வந்து
நெஞ்சைத் தொட்டு போவதேன்!
என்ன இது என்ன இது - வானவில்லில்
வண்ணம் ரெண்டு கூடுதே!!
தீண்டினால் வானிலே மேகமாய் அலைகிறேன்!
நீங்கினால் தூரத்தில் புள்ளியாய் தொலைகிறேன்!
நில்லென்றால் நில்லாமல் ஏனென்று கேளாமல்,
ஏதேதோ செய்கிறாய் ஏனடி?.
அன்பே வா அன்பே வா...
அன்பே வா அன்பே வா...
என்ன சொல்லி என்ன சொல்லி
காதலதை உன்னிடத்தில் காட்டுவேன்!
சத்தமின்றி சத்தமின்றி மௌனமாய்
நெஞ்சுக்குள்ளே பூட்டுவேன்!!
கவிதைகள் எழுதிட
வார்த்தைகள் தேடினேன்!
உன் பெயர் எழுதி நான்
கவிதையாய் பாடினேன்!!
என்னுள்ளே என்னுள்ளே
உன் கண்ணின் மின்சாரம்
ஏதேதோ செய்யுதே ஏனடி?
அன்பே வா அன்பே வா...
அன்பே வா அன்பே வா...
தொட்டுப்பார் மார்பிலே!!!
தொட்டுப்பார் மார்பிலே குளிர் காய்ச்சல்
கேட்டுப்பார் உதட்டிலே முத்தக்கூச்சல்
என்னைப்பார் அழகிய பொன்னூஞ்சல்
ஆடிப்பார் ஏனிந்த எதிர் நீச்சல்
என்னைப்பார் ஆனந்த நீர்ப்பாய்ச்சல்
பெண்மையே இங்கொரு விஞ்ஜானம்.
கண்களால் செய்திடு ஆராய்ச்சி!.
பெண்மையே இங்கொரு நதியாகும்.
முத்தத்தால் ஊற்றிடு நீர்வீழ்ச்சி!.
கட்டில்தான் பார்க்கட்டும் கண்காட்சி!!
பெண்கள் இதில் மட்டும் நடிப்பார்கள்!
ஒரு கூச்சத்தில் ஆசையை மறைப்பார்கள்!!.
மெதுவாய் மெத்தைக்கு வருவார்கள்!
பின் ஆண் விரல் தொடுகையில் நெளிவார்கள்!!.
உடையில் தன்னுடல் ஒளிப்பார்கள்!
போதும் போதும் என்பார்கள்!!.
கடைசி வரையிலும் ரசிப்பார்கள்!
கட்டில் போரில் ஜெயிப்பார்கள்!!.
கடலை தேவர்கள் கடையாமல்,
கைகளில் அமிர்தமும் கிடையாது!.
உடலை நீவந்து உரசாமல்,
பெண் உள்ளத்தில் வேதனை அடங்காது!.
கல்லை உளியால் செதுக்காமல்,
சிற்பமும் இங்கே இருக்காது!.
பெண்ணை இதழால் செதுக்காமல்,
மோட்சமும் இங்கே கிடைக்காது!.